Monday, August 17, 2015

தீர்வு - The Solution (Bertolt Brecht)

பதாகை மின்னிதழில் வெளியான எனது மொழிபெயர்ப்பு
தீர்வு

ஜூன் 17 கிளர்ச்சிக்குப் பின்னர்
அரசாங்கத்தின் நம்பிக்கையை
மக்கள் இழந்து விட்டதாகவும்
மேலதிக முயற்சிகளின் மூலமே
இழந்த நம்பிக்கையை மீட்க முடியும் என்றும்
ஸ்டாலின்பாதையில் துண்டுப் பிரசுரங்களை விநியோகித்தார்
எழுத்தாளர் சங்கச் செயலர்.
அப்படி இருக்கும் பட்சத்தில் அரசாங்கம்
மக்களைக் கலைத்துவிட்டு வேறொரு
மக்களைத் தேர்ந்தெடுப்பது எளிதல்லவா?



The Solution – Bertolt Brecht
After the uprising of the 17th of June
The Secretary of the Writers' Union
Had leaflets distributed in the Stalinallee
Stating that the people
Had forfeited the confidence of the government
And could win it back only
By redoubled efforts. Would it not be easier
In that case for the government
To dissolve the people
And elect another?


குறிப்பு: கிழக்கு ஜெர்மனியில் 1953 ஜூன்16ல் பெர்லின் கட்டுமானத் தொழிலாளர்கள் ஆரம்பித்த போராட்டம் ஜூன் 17ல் நாடு தழுவிய கிளர்ச்சியாக மாறியது. சோவியத் அரசாங்கம் தன் படைகளைக் கொண்டு போராட்டத்தை அடக்கியது.  513 பேர் கொல்லப்பட்டனர், 106 பேர் தூக்கிலிடப்பட்டனர். கிழக்கு ஜெர்மனியில் ஆட்சியில் இருந்த கம்யூனிஸ்ட் கட்சி இந்தப் போராட்டத்துக்கு மேற்கத்திய நாடுகளே காரணம் என்று கூறியது. அதற்கு எதிர் வினையாக எழுதப்பட்டது பெர்டோல்ட் பிரக்ட்டின்  இந்த ஜெர்மானியக் கவிதை. Wikipedia வில் உள்ள ஆங்கில மொழிபெயர்ப்பை வைத்துத் தமிழில் மொழிபெயர்க்கப் பட்டது. போராட்டம் பற்றிய விக்கி சுட்டி https://en.wikipedia.org/wiki/Uprising_of_1953_in_East_Germany

2 comments:

L N Srinivasakrishnan said...

அருமையான கவிதை. நான் காலேஜில் ஜெர்மன் வாசித்த போது கேட்ட ஞாபகம். பல நினைவுகளுக்கு பின் தமிழ் கவிதையை மீண்டும் படித்தேன். ஜெர்மன் மூலத்துடன் நன்றாகவே ஒத்துப் போகிறது.

Chenthil said...

நன்றி. சில சமயம் நம் மொழிபெயர்ப்பை யார் படிக்கப் போகிறார்கள் என்று ஒரு சலிப்பு தோன்றும். இது போன்ற பாராட்டுகள் அந்தச் சலிப்பைப் போக்கும்.