Monday, September 29, 2014

ஒரு இனிய ஞாயிறு மதியம்

"ஏய், என்ன பண்ணிட்டிருக்க."

"ஒண்ணும் இல்ல. ஞாயித்துக்கிழமை மத்தியானம், வெட்டியா தான் இருக்கேன். நீ எங்க இருக்க"

"இங்க விண்ட்ஸர் வரைக்கும் சும்மா வந்தோம். Eton Antique book shop ன்னு ஒரு கடை பாத்தேன். அதான் உனக்கு எதுவும் வாங்கனுமான்னு ஃபோன் பண்ணேன்”

“Antique ன்னா அதிக விலை சொல்வானே.”

“இல்லை 20,30 பவுண்ட்ல எல்லாம் இருக்குது. சார்லஸ் டிக்கன்ஸ் கலெக்‌ஷன், இல்லஸ்ட்ரேட்டட் ஷெர்லக் ஹோல்ம்ஸ். என் colleague கூட Complete works of William Shakespeare 24 பவுண்டுக்கு வாங்கினாரு. 100 வருஷம் முன்னாடி ஸ்கூல்ல பிரைஸ் கொடுத்தது”




“அத எடுத்துக்கோ. 37 டிராமாவும் இருக்கான்னு பாரு. ஜார்ஜ் ஓர்வெல் எழுதின Animal Farm, 1984, ஜேம்ஸ் ஜாய்ஸ் எழுதின Ulysses, Finnegan's Wake இருந்தா வாங்கு”

சற்று நேரம் கழித்து

“அவன் கிட்டே கேட்டேன். ஓர்வெல் எல்லாம் வந்த அன்னிக்கே வித்துடுமாம்.”

“சரி, ஜேம்ஸ் ஜாய்ஸ்”

“அவன் என்ன கேவலமா பாத்துட்டு அதெல்லாம் படிக்கறது ரொம்ப கஷ்டம், அதுவும் Finnegan's Wake வாய்ப்பே இல்லன்னுட்டான். அவன் கிட்ட காப்பி இல்லையாம். அவனே வேற யார்கிட்டயோ ரொம்ப நாளா கேட்டுகிட்டு இருக்கானாம்.”

“நீ அவன் கிட்ட Dubliners படிச்சிருக்கேன் போடான்னு சொல்லியிருக்கனும்.  வேற என்ன இருக்கு அங்க”

“வின்ஸ்டன் சர்ச்சில் எழுதின World War II : Complete set இருக்கு”

“அது ஒரு வால்யூம் படிச்சிருக்கேன், ரொம்ப போர் அடிக்கும். வேற”

“Fall of Roman Empire. அது படிப்பியா?”

“அய்யோ. I have been waiting for it. கிண்டில்ல இலவசமா டவுன்லோட் பண்ணேன். ரெண்டாவது வால்யூம் இல்ல. அதுனால தொடர்ச்சி இல்லாம மூணாவது வால்யூம் பாதிலயே நிப்பாட்டிட்டேன். “

“ஆனா 195 பவுண்ட் போட்டிருக்கான், வாங்கவா?”

“195 ரொம்ப அதிகம். சரி வேணாம் விட்டுடு.”

“இரு, இரு. அதே ரெண்டு வால்யூம்ல 1952ல பப்ளிஷ் பண்ண வேற காப்பி இருக்கு. 38 பவுண்டு தான்”

“உடனே வாங்கிடு.”

No comments: